கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்போம்-ஜான்பாண்டியன்.

தமமுக மாநில தலைவர் ஜான்பாண்டியன் ஈரோட்டில் அளித்த பேட்டியில், 'தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில்தான் தமமுக முடிவு செய்யும். கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்போம். ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சியானது. தமிழ்நாட்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளும் துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் குழந்தை; பிறந்து தவழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அக்கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? என தெரிவித்துள்ளார்.
Tags : கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்போம்-ஜான்பாண்டியன்.