ரெம்டெசிவிர் வழக்கில் கைதானவர்களிடம்  ரூ.1 லட்சம் அபகரித்த காவலர்கள் 

by Editor / 20-05-2021 05:30:06pm
ரெம்டெசிவிர் வழக்கில் கைதானவர்களிடம்  ரூ.1 லட்சம் அபகரித்த காவலர்கள் 

 


சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்று கைதானவர்களின், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாயை அபகரித்த குற்றச்சாட்டில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர் உட்பட ஐந்து பேரை கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், கைதானவர்களின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி, ஒரு லட்ச ரூபாயை அபகரித்ததாக தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணக்குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இருவரையும் சஸ்பெண்டு செய்து சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via