கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி

by Staff / 13-09-2023 11:57:47am
கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை, மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பாண்டியன் - சுகந்தி தம்பதியினர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்று செப்டிக் டேங்கில் சுகந்தி வீசியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via