12-வது பாட புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவு; அண்ணாமலை
சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி. மு. க. , அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும், " என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.
Tags :