ஓ பன்னீர்செல்வம் கோவையில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளளாா்.

by Admin / 01-05-2023 01:20:42pm
 ஓ பன்னீர்செல்வம் கோவையில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளளாா்.

திருச்சி மாநாட்டின் வெற்றி பூரிப்பில் இருந்த ஓ பன்னீர்செல்வம் இப்பொழுது கோவையிலும் மதுரையிலும் தனது மாநாடை நடத்துவதற்காக தன்னுடைய கிரீன்வேஸ் இல்லத்தில் வைத்திய லிங்கம் ,மனோஜ் பாண்டியன்,,ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினாா்.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து அதிமுகவுக்குள்ளே -அதிமுக தொண்டர்களுக்குள்ளே தனக்கு ஒரு பலம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக ,திருச்சியில் மாநாடு நடத்தியது போன்று மதுரையிலும் கோவையிலும் நடத்த உள்ளாா். எடப்பாடி பழனிச்சாமி  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  டெல்லியில் சந்தித்து பேசியதின் பின்னர் அதிமுக பாஜக இடையிலான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் மதுரையில் மாநாட்டு ஒன்றை நடத்துவதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிகிறது. இரட்டை இலை சின்னம் தங்கள் வசம் இருப்பதால் எப்படியும் அதிமுக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் எடப்பாடி அணியினர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியினுடைய பெயரையும் கட்சியினுடைய சின்னமான இரட்டை இலையை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்து வரும் நிலையி, திருச்சி மாநாட்டில் பன்னீர்செல்வம் அணியினர் அதை தவிர்த்ததை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்கள் இந்நிலையில் மேற்கு மாவட்டங்களில் தன்னுடைய தொண்டர்களின் உடைய பலத்தை அறிய வேண்டும் என்பதற்காக ஓ பன்னீர்செல்வம் கோவையில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளளாா். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு அச்சத்தையும் ஒரு கலக்கத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக மேற்கு மண்டலத்தை தேர்வு செய்து உள்ளார். மதுரை மாநாட்டின் மூலமாக கிழக்கையும் தெற்கையும் உள்ள மாவட்டங்களை -மாவட்டங்களில் நிர்வாகிகள் கலந்து கொள்வதற்கும் பன்னீர் செல்வத்தின் அணியின் மீது ஒரு நம்பிக்கையை பெறுவதற்காகவும் இந்த மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.

 

 

Tags :

Share via