ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை நல்லடக்கம்

by Editor / 19-09-2025 09:33:21am
ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை நல்லடக்கம்

 நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (செப்.18) காலமானார். படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கர் திடீரென மயக்கமடைந்தார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 4:30 மணியளவில் வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

 

Tags :

Share via