நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி. 

by Staff / 19-09-2025 08:41:42am
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி. 

நடிகர் ரோபோ சங்கர் மறைவையொட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் சங்கர் காலமானார். திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் திரண்டு வருகின்றனர். எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

 

Tags : நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி 

Share via