நடிகர் குணால் கம்ரா, மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறான கருத்து
நடிகர் குணால் கம்ரா, மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, மாநில சட்ட மேலவையின் உரிமைக் குழு நடிகர் குணால் கம்ராவுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் மாற்றங்களை விமர்சித்து கம்ரா வெளியிட்ட ஒரு பகடிப் பாடல் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கம்ரா பிப்ரவரி 17, 2026 அன்று உரிமைக் குழுவின் முன் நேரில் ஆஜரானார். எனினும், புகார்தாரரான பா.ஜ.க எம்.எல்.சி பிரவீன் தரேக்கர் ஆஜராகாததால், இந்த விசாரணை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ்தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார், கடந்த ஜனவரி 28-ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவாரின் மனைவியும் தற்போது துணை முதல்வருமான சுனேத்ரா பவார், இந்த விபத்தில் சதித் திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.விமானக் குழுவினரில் கடைசி நேர மாற்றங்கள், விமானத்தின் 'பிளாக் பாக்ஸ் சேதமடைந்தது மற்றும் அவசர காலத் தகவல்கள் ஏதும் பதிவாகாதது போன்ற காரணங்களால் இந்த விசாரணை கோரப்பட்டுள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை நேரில் சந்தித்து சுனேத்ரா பவார் தலைமையிலான குழு மனு அளித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
Tags :


















