ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்குவது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும்.
ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்குவது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் தெரிவித்துள்ளார் .ஸ்ரீநகரில் உள்ள ஷேர் காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தந்தி -சட்டப் பட்டறையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதை குறிப்பிட்டார் .ஜம்மு -காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே மக்களவையில் உறுதி அளித்துள்ளதை நினைவு கூர்ந்தார். இது ஒரு முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான விஷயம் என்றும் இதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை இருப்பதாகவும் அது தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். விரைவில், இது குறித்து ஒரு நல்ல முடிவை நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். . இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா அமைச்சரின் இந்த கருத்தை வரவேற்றார். இருப்பினும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் வரை ஜம்மு காஷ்மீர் மக்கள் முழு திருப்தி அடைய மாட்டார்கள் என்றும் காத்திருப்பது இன்னும் நீடிக்காது என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்..
Tags :



















