போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கான சுங்கவரி 50+50 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது.

by Staff / 15-02-2025 04:35:11pm
போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கான சுங்கவரி 50+50 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது.

போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கான சுங்கவரி 50 சதவீதம் மற்றும் கூடுதல் வரி 50 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இந்த வரி 150 சதவீதமாக இருந்தது. இந்த வரி விதிப்பு போர்பன் விஸ்கிக்கு மட்டும் தான் என்றும், மற்ற மதுபானங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த போர்பன் விஸ் தயாரிப்பாளர்களுக்கு நல்ல பலனடைய உள்ளனர். ஏனெனில், இந்தியாவுக்கு போர்பன் விஸ்கியை ஏற்றுமதி செய்யும் முன்னிலை நாடாக அமெரிக்க திகழ்கிறது.கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

 

Tags :

Share via