யாரும் பாஜகவுக்கு வாக்கு கேட்கவில்லை: நயினார்
மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், "மற்ற மதங்கள் மாநாடு நடத்துவது போல நாங்களும் மாநாடு நடத்தினோம். இதில் பாஜகவுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என யாரும் கேட்கவில்லை, மற்ற மதங்கள் குறித்து பேசவில்லை. இதை இந்து முன்னணியினர் நடத்தினார்கள் நாங்கள் பங்கேற்றோம்" என தெரிவித்துள்ளார்.
Tags :



















