படியில் பயணிக்கும் மாணவர்களுக்கு சீர்திருத்த பள்ளிதான்.. நீதிமன்றம்

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனி பேருந்து இயக்க உத்தரவிடக்கோரிய மனுமீதான விசாரணையில், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும் மாணவர்கள் படியில்தான் பயணிக்கின்றனர். நடத்துனரின் பேச்சைக் கேட்காமல் படியில் பயணிப்பவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரும் என எச்சரித்துள்ளார்.
Tags :