செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் 

by Editor / 07-04-2023 10:56:49pm
செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் 

விழாக்கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே  மதுரை  கோட்டம்  சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை பகல் 2.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் நள்ளிரவு 2.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo