உத்தரவை மீறி ஜோராக மது விற்பனை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல மதுக்கடைகளில் அரசின் உத்தரவை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் மது பிரியர்கள் மதுவை வாங்கி அருந்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Tags :