9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 12-10-2023 04:44:55pm
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் என 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via