மனைவி பிரிந்து சென்றதால் 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூரில் பெற்ற 3 குழந்தைகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கூரில் பகுதியைச் சேர்ந்த தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு, 3 குழந்தைகளை விட்டுவிட்டு, தாய் சென்றுள்ளார். இந்நிலையில், தான் பெற்ற 3 குழந்தைகளை தந்தை வினோத்குமார் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து தந்தை வினோத்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : மனைவி பிரிந்து சென்றதால் 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது.