ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்த்து விபத்து - 18 பேர் படுகாயம்.

by Editor / 19-11-2024 12:04:19am
 ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்த்து விபத்து - 18 பேர் படுகாயம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி 2 பேருந்துகளில் வந்த நிலையில் செங்கோட்டையில் பேருந்து நிறுத்திவிட்டு தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக, 18 பக்தர்கள் செங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வேனை வாடகைக்கு எடுத்து பக்தர்கள் அச்சன்கோவில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் சபரிமலை செல்வதற்காக தமிழகம் வழியாக வந்து கொண்டிருந்த நிலையில்,  செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை பகுதியில் வேன் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் வேனில் இருந்த 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை மீட்டு தற்போது சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ள நிலையில், வேனில் பயணம் செய்த குகநாதன், சந்தான லெட்சுமி, தட்சீணாமூர்த்தி, ராஜசேகர், சுப்பிரமணி, மணிகண்டன், தேவராஜ் உள்ளிட்ட சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இருப்பினும், ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த விபத்தால் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து செங்கோட்டை போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

 

Tags :  ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்த்து விபத்து - 18 பேர் படுகாயம்.

Share via