டி.எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விசிக, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் கைது.

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் அசோக் இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் மேலும் விசிக வில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ஆக உள்ளார்.இவர் பொள்ளாச்சி-கோவை சாலையில் விசிக டிஜிட்டல் பேனர் வைத்திருந்ததை அகற்றக்கோரி பொள்ளாச்சி உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் கூறியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அசோக் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உதவி கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் விசிகமாவட்ட செயலாளர் அசோக் குமாரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : விசிக, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் கைது.