பெகாசஸ் ஓட்டுக்கேட்பு விவகாரம் மேலும் 4 வார காலம் அவகாசம்

by Staff / 20-05-2022 04:12:43pm
பெகாசஸ் ஓட்டுக்கேட்பு விவகாரம் மேலும் 4 வார காலம் அவகாசம்

 பெகாஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணைக்குழுவின் மேலும் 4 வார காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  பெகாஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது இருபத்தி ஒன்பது செல்போன்களை ஆய்வு செய்துள்ள வல்லுநர் குழு அதன் அறிக்கையை மே மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான ஆய்வுக் குழு தெரிவித்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வரும் ஜூன் 20ஆம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

 

Tags :

Share via

More stories