புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம்
கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். நலவாழ்வு மையங்களில் (Health and Wellness Centres) தற்காலிக அடிப்படையில் செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் செவிலியருக்கு மாத ஊதியும் ரூ14,000/- மும், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11,000/- மும் வழங்கப்பட உள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்றில் பணியாற்றியவர்களுக்கும், உள்ளூரில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணிவழங்க வழிகாட்டுதல்கள் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tags :



















