சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

by Staff / 23-08-2025 10:44:04am
 சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

Tags :  சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

Share via