அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா
ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
உக்ரைன் மீதான போருக்குப் பின்னர் வர்த்தக உறவுகள் மாறிய போதும் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் பெற்று வருகிறது.ஆறு எண்ணெய் கப்பல்கள் நிறைந்த கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.இதுதான் இந்தியாவின் அதிகபட்சமான கச்சா எண்ணெய் வர்த்தகம்.மாதந்தோறும் 5 ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு செல்வதாக ரஷ்யாவின் ESPO எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கு நீண்ட காலமாக இந்த சரக்குக் கப்பல்கள் செல்லும்.கவர்ச்சிகரமான விலை நீடிக்கும் வரை, நிஜமான பொருளாதாரத் தடைகளும் தடுக்கும் வரை இந்தியாவுடனான வர்த்தகம் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Tags :