புதுச்சேரியில் ரோடுஷோ விஜய் தன் முடிவில் மாற்றம்
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். முதல்வர் ரங்கசாமி தலைமையில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் ரோடு ஷோ நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும்,புதுச்சேரியில் உள்ள ரோடு மிக குறுகிய நிலையில் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி ரோடு சோ அனுமதி வழங்கக் கூடாது என்றும். கரூர் சம்பவத்தை போல் நடந்து விடக்கூடாது என்பதற்காக காவல் துறை தலைவர் நடத்துவதற்கு அனுமதி மறுத்தார். ஆனால் பொது இடத்தில் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என்று அரசு தரப்பு சொல்லப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது விஜய் தன் முடிவில் மாற்றம் செய்து உள்ளதாக தகவல்..
Tags :



















