தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்: அதிமுக

by Editor / 13-07-2021 08:37:00am
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்: அதிமுக

தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துகின்றன.

இதனால், ஊடக விவாதங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்தித் தொடர்பாளர்களோ இனி யாரும் பங்கேற்க மாட்டார்கள். எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

Tags :

Share via