கோவிட் சான்றிதழில் இருந்து மோடி புகைப்படம் அகற்றம்

by Staff / 02-05-2024 02:32:47pm
கோவிட் சான்றிதழில் இருந்து மோடி புகைப்படம் அகற்றம்

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படம் சான்றிதழில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கோவின் சான்றிதழில் இருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சில நாள்கள் முன்னதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தற்போது தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிரதமரின் படம் நீக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

 

Tags :

Share via