மழையிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு அமைச்சர் ராஜ கண்ணப்பன்

by Staff / 14-10-2024 01:10:46pm
மழையிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு அமைச்சர் ராஜ கண்ணப்பன்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ உள்ள 4,000 ஆவின் பால் பவுடர் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் அரை லிட்டர் கொண்ட 50,000 பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூரில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo