தலைமைச் செயலகத்திற்கு முன்பாக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

by Admin / 26-05-2026 02:16:22pm
தலைமைச் செயலகத்திற்கு முன்பாக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

 சென்னை தலைமைச் செயலகத்திற்கு முன்பாக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். சிறு குரு விவசாயிகளுக்கு 50,000 வரை பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாகவும் 5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலமுடைய விவசாயிகளின் கடன்கள் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். .இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனை விவசாய சங்க தலைவர் பி .ஆர். பாண்டியன் சந்தித்து மேகதாது விஷயமாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தலின் போது விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது அதன்படி விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via
Logo