5 சதவீதமாக குறைப்பட்டதாக மக்களவையில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பட்டதாக மக்களவையில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அப்போது, மருந்துகளுக்கான சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அதாவது, கொரோனா பெருந்தொற்று தொடங்கியபோது, அனைத்து மருந்துகளின் விற்பனையின்போது 5 முதல் 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது.
கொரோனாவுக்கான மருந்துகள் மற்றும் அதன் சிகிச்சை உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டது என்றார்.
Tags :