ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. ஒருவருக்கு சிகிச்சை

by Editor / 09-07-2025 02:29:21pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. ஒருவருக்கு சிகிச்சை

கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் இன்று (ஜூலை 9) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். உயிரிழந்தவர்கள் சந்தோஷ் குருடேகர் (44), சுவர்ணா மற்றும் மங்களா என அடையாளம் காணப்பட்டுள்ளது. சுனந்தா குருடேகர் என்பவர் மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via