போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது-தங்கம் தென்னரசு

by Editor / 28-07-2023 11:41:27pm
போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது-தங்கம் தென்னரசு

என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக பாமக சார்பில் இன்று நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, என்.எல்.சி.க்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறி பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். பிரச்னையை பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வன்முறையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது, என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் பரவனாற்றில் மாற்றுப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.2006 - 2013 வரை 352 விவசாயிகளிடம் இருந்து 104 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.ஏக்கருக்கு ₹6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், ₹10 லட்சம் கருணை தொகை வழங்கப்பட உள்ளது.“போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அறவழியில் போராட அரசு அனுமதி வழங்கியது'' எனத் தெரிவித்தார். பாமக சார்பில் இன்று நடந்த போராடத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீசார் மீது கற்களை தூக்கி வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via