அமெரிக்க அரசு ஊழியர்களின் பணிநிறுத்தம் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்டதொடா்கதையாக மாறியுள்ளது

by Admin / 07-11-2025 01:56:35am
அமெரிக்க அரசு ஊழியர்களின் பணிநிறுத்தம் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்டதொடா்கதையாக மாறியுள்ளது

அமெரிக்க அரசு ஊழியர்களின் பணிநிறுத்தம் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்டதொடா்கதையாக மாறியுள்ளது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஊதியம் பெறாத விமானப் போக்குவரத்து நிறுவன ஊழியர்களிடமிருந்து வரும் விடுமுறை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று முதல் 40 முக்கிய விமான நிலையங்களில் விமானங்களை 10% வரை குறைக்கும் திட்டத்தை அமெரிக்க போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 


பிலிப்பைன்ஸில், புயல் கல்மேகி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைந்தது 114 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். புயல் ,வியட்நாமில் கரையைக் கடந்துவிட்டது, அங்கு மீட்பு முயற்சிகளுக்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் தயாராக உள்ளனர். 

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முதல் பெண் சபாநாயகரான நான்சி பெலோசி , காங்கிரசில் பலஆண்டு  காலம் பணியாற்றியதால் இனிவருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

சூடான்மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

கொடிய 737 மேக்ஸ் விபத்துக்கள் தொடர்பான குற்றவியல் வழக்கை அமெரிக்க நீதிபதி தள்ளுபடி செய்தார், இந்த முடிவு பொது நலன் சார்ந்தது என்று தான் நம்பவில்லை என்றும் ஆனால் மறுக்க அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார். 


கென்டக்கியின் லூயிஸ்வில்லி அருகே புறப்படும் போது யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள், கடுமையான தடையை அமல்படுத்தியதால் ,அபின் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளதாக ஐ.நா.வின் புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

 வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக விலக்கு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக, சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் கத்தாரின் தோஹாவில் கூடியுள்ளனர்.

இந்தியா -. ஆஸ்திரேலியா கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது . 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியிலும் ஆண்கள் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.


 

 

Tags :

Share via