பிரதமர் நரேந்திர மோடி தேசியப் பாடலான " வந்தே மாதரம் " பாடலின் 150-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.
புதுதில்லியில்,இன்று காலை 9.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியப் பாடலான " வந்தே மாதரம் " பாடலின் 150-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து ,நினைவு முத்திரை மற்றும் நாணயமும் வெளியிடஉள்ளாா்.,,.இது ஓராண்டு கால கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வாகும் (நவம்பர் 7, 2025 முதல் நவம்பர் 7, 2026 வரை.... மேலும், நாடு முழுவதும் உள்ள 150 முக்கிய இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி 'வந்தே மாதரம்' பாடலின் முழுப் பதிப்பையும் பாடும் வெகுஜன பாடல் நிகழ்வும் நடைபெறும்..
இப்பாடல் 1875 -ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்டது.. இது முதன்முதலில் அவரது 'ஆனந்த மடம்' நாவலில் வெளியானது...
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டிய இப்பாடலின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் இக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.,
. .
Tags :


















