விருதுநகர் ரயில்வே பெண் ஊழியர் மாரீஸ்வரிக்கு விருது

by Editor / 01-02-2023 08:37:32pm
விருதுநகர் ரயில்வே பெண் ஊழியர் மாரீஸ்வரிக்கு விருது

மதுரை கோட்டத்தை சேர்ந்த பெண் ரயில்வே ஊழியருக்கு இந்திய சாரண சாரணியர் சம்மேளனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

விருதுநகர் ரயில் நிலையத்தில் எஸ்.மாரீஸ்வரி ரயில்வே மின்சார பிரிவில் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சாரண இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி விருதுநகரில் கலாம் கல்பனா சாவ்லா சாரணர், சாரணியர் குழு நடத்தி வருகிறார். தங்கள் குழு ஆற்றும் சமூக சேவை பணிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்தியாவில் 2022 ஆண்டிற்கான இளைஞர் விருதுகளுக்கு தமிழ்நாடு கர்நாடகா டெல்லி அசாம் ராஜஸ்தான் அருணாச்சல பிரதேஷ் ஆகிய பகுதிகளில் இருந்து 9 பேரை தேர்வு செய்தது இந்திய சாரண, சாரணிய சம்மேளனம். ராஜஸ்தான் மாநிலம் பாலி மார்வாரில் நடைபெற்ற சாரண சாரணியர் விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விருதுநகர் மாரீஸ்வரிக்கு இளைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாரீஸ்வரி விருது மற்றும் சான்றிதழுடன் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி இசக்கி ஆகியோர் இருந்தனர்.

 

Tags :

Share via

More stories