ம.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்துள்ளது. அக்குழுவில் வைகோ தலைமை ஏற்கிறார். அவரை தொடர்ந்து அர்ஜுனராஜ், எம். செந்தில் தீபன் ,சு. ஜீவன் ,வீ சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க அதன் பொருளாளர் டி. ஆர் .பாலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நாளை முதல் தொடங்க உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளில் சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்படலாம் என்கிற கருத்து உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தமது தொகுதி பங்கீட்டிற்கு 5 பேர் கண்ட குழுவை அமைத்துள்ளது.
Tags :


















.jpg)
