செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை இன்று 28-ம் தேதி வரை நீட்டித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நேரில் இன்று ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு திடீரென தற்போது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Tags :