ஹிஸ்புல்லா அமைப்பும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
லெபனானின் தெற்கு லிட்டானி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கிஸ் ஃபுல்லா முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை அதன் தலைவர் நயிம் காசிம் அடிபணிதல் அவமானம் எனக் கூறி நிராகரித்ததாக தெரிய வருகிறது .தற்காலிக அல்லது பகுதி அளவிலான போர் நிறுத்தங்களை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேலிய படைகள் லெபனானில் இருந்து முழுமையாக வெளியேறினால் மட்டுமே தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்றும் ஹிஸ்புல்லா தங்கள் தரப்பு செய்தியை முன் வைத்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கார்ட்ஸ் இப்போதைய சூழலில் இஸ்ரேலிய படைகள் லெபனில் இருந்து திரும்பப் பெறப்படாது என்றும் தாக்குதல் நடவடிக்கைகள் தற்போதைக்கு தொடரும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார் .தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்களை தொடர்ந்து பராமரிக்கப் போவதாகவும் இடம் பெயர்ந்த லெபனான் மக்கள் தற்போதைக்கு அங்க திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் பட்சத்தில் லெமன் தலைநகர் பெய்ரூட் உள்பட எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் முழு சுதந்திரம் இஸ்ரேல் ராணுவத்திற்கு உண்டு என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் லெபனாரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் பொதுமக்கள் போராளிகள் என பலர் உயிரிழந்து உள்ளன வடவேற்கு இஸ்ரேல் எல்லைப் பகுதிகளை நோக்கிய ஹிஸ்புல்லா அமைப்பும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
Tags :



















