ஐந்து வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்று கொன்றது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட்டில் வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்று கொன்றது. தன்னுடைய தங்கையோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தேயிலைத் தோட்டத்தில் இருந்து வந்த சிறுத்தை சிறுவன்அஸ்ஸாமைச் சேர்ந்த ரோஜா வலிசா ஜீவிதா பேகம் தம்பதியினரின் ஐந்து வயது சிறுவன் சைபுல் ஆலமீனை கவ்வி எழுத்துச் சென்றது. இங்கிருந்தவர்கள் திரண்டு வந்து கூச்சலிட்டனர். இருப்பினும் சிறுத்தை அந்த சிறுவனை கவ்வி சென்றது. தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வனப்பகுதியில் தேடினர். சிறுவன் கழுத்தில் சிறுத்தை கடித்த காயங்களுடன் இறந்து கிடந்தான் உடனே வனத்துறையினரும் காவல்துறையினரும் சிறுவனை பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் தொடர்பாக வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுதியில் இந்த சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Tags :









.jpeg)








