மாவட்டங்களில் 12 லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநக,ர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி , திண்டுக்கல், ராமநாதபுரம் ,டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ,தஞ்சாவூர் மாவட்டங்களிலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என்றும் ஆங்காங்கே லேசான தூறல் மட்டுமே இருக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :


















