திமுகவிடம் 9 தொகுதிகளை கேட்கும் காங்..

by Staff / 22-02-2024 02:28:39pm
திமுகவிடம் 9 தொகுதிகளை கேட்கும் காங்..

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 9 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் தேசிய, மாநில அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, காங். - திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த முறையை போல தற்போதும் 9 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஒப்புதல் தெரிவிக்காத முதல்வர், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாகக் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via