by Editor /
07-07-2023
09:54:14pm
இன்று தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அவரது உடலை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தோளில் சுமந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, விஜயகுமாரின் சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.<br />
Tags :
Share via