பொறுத்திருந்து பாருங்கள். என்று ஒற்றை வரியில் பதில். இது ஒர் அரசியல் சாணக்கியம்.

by Admin / 05-10-2024 02:28:36am
 பொறுத்திருந்து பாருங்கள். என்று ஒற்றை வரியில் பதில். இது ஒர் அரசியல் சாணக்கியம்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கும் பிரசாதமான லட்டில் நெய்யோடு சேர்ந்து மிருக கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு வைத்து அது அடங்கும் முன்னே, ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இரு மாநிலங்களுக்கு இடையில் மீண்டும் பழைய பிரச்சனையை பேசி மக்களிடையே வெறுப்பு கலாச்சாரத்தை விதைத்துள்ளார்.. சனாதன தர்மத்தை யாராலும அழிக்க முடியாது என்றும் அது வைரஸ் போல் பரவக்கூடியது என்கிற மாதிரியாக பேசி இருந்தார்.. ஏற்கனவே முடிந்து போன பிரச்சனையை  இப்பொழுது பவன் கல்யாண் ஆயுதமாக எடுத்து மத அம்பை தொடுத்திருக்கிறார்.. இது இரு மாநில மக்களுக்கு இடையே இருக்கக்கூடிய நல்லுறவை பாதிக்கக் கூடியதாக அமையும் என்பதை புரியாமல் அரசியல் திசை திருப்புதலுக்காக இதை கையில் எடுத்து உள்ளார்.. அவர் ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் மட்டும்தான். இந்தியா முழுமைக்கும் விவாத பொருளாகி ஓய்ந்து போனவர் விஷயத்தை மீண்டும் இவர் தூசி தட்டி கையில் எடுத்து இரு மாநிலத்திற்கு இடையிலே உரசல் போக்கு உருவாக்கி விட்டுள்ளார். அவர் மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற பொழுது இதை அவர் இந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன.? இதற்கு முன்பு சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது பலர் பல்வேறுபட்ட கருத்துக்களை சொல்லி இருக்கிற நேரத்தில் இவர் ஒர்அரசியல் கட்சியினுடைய தலைவராக இருக்கிற பொழுது இந்த கருத்தை கூறியிருக்கலாம்.. ஆனால், இப்பொழுது இவர் கூற வேண்டிய உள்நோக்கம் என்ன?... தேவையற்ற வீணான குழப்பங்களை- மதம் சார்ந்த கருத்தை மக்களிடம் மீண்டும் உருவாக்க முயற்ச்சி எடுக்கிறார். என்றால் அது பவன் கல்யாணிற்கு மிகப்பெரிய ஒரு தீங்காக தான் அமையும்.. இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு அவர் கடந்து சென்று விட்டார்.. இதை மீண்டும் ஒரு விவாத பொருளாக்கி...  தன் கவனத்தை திருப்ப வேண்டாம் என்று அவர் கடந்து சென்று விட்டார் என்று தோன்றுகிறது. இது ஒர் அரசியல் சாணக்கியம் என்று சொல்லலாம். தேவையற்றவைகளை எப்படி விலக்க வேண்டுமோ, அதை அவர் மிகத் தெளிவாக செய்துள்ளார்..

 

Tags :

Share via