கருகலைப்பும் செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

by Admin / 09-03-2022 11:35:29pm
கருகலைப்பும் செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

திருப்பத்தூர் கந்தலியில் உள்ள கதிரம்பட்டியில்   வயல்வெளிக்கு அருகே குடிசை அமைத்து கருவிலிருக்கும் குழந்தை ஆணா -பெண்ணா எனக்கண்டறிந்து  கருக்கலைக்கும் தொழிலை சாமநகரைச்சார்ந்த சுகுமார்,செலந்தம் பள்ளி  சேடியப்பன்ஆகிய இருவரும் சேர்ந்து அல்ட்ராவைலட் ஸ்கேனர் வைத்து அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து சொன்னதோடு மட்டுமில்லாமல் கருகலைப்பும் செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.இவர்களின் இந்த செயல்பாடுகள் நுண்ணறிவு புலனாய்வு துனணகண்காணிப்பாளருக்கு தெரிய வரவே கிராம அலுவர் உள்பட ஐந்து பேர் கொண்ட குழு அதிகாலை முகாமிட்டுள்ளனர்.அந்த நேரத்தில் இரு ஆட்டோக்களில் பத்து கர்ப்பிணி வந்தது தெரிய வந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர்,மாவட்டக்காவல் கண்காணிப்பாளர்,துணை ஆட்சியர்,வட்டாசியர் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டடு சுகுமார்,சேடியப்பன் இருவரையும்பத்து கர்ப்பிணிபெண்களையும்
கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 75.000ரூபாய்,அல்ட்ரா வைலட் ஸ்கேனரைக்கைப்பற்றி காவல் நிலையத்தில் 
ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via
Logo