திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு எப்பொழுது கோபம் வருகிறதோ அப்பொழுது தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி முடிவுக்கு வரும்
இன்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசும் பொழுது திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு எப்பொழுது கோபம் வருகிறதோ அப்பொழுது தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம் மு க ஸ்டாலினுக்கு கோவம் வரும் பொழுது ஆட்சி உடனே நிலையாக கவர்ந்து விடும் என்றும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளதால் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அதிகபட்ச மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்றும் தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ள வெற்றியானது நிலையானது அல்ல என்றும் வரவேற்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் மேயராக துணை முதல்வராக முதல்வராக இருந்த மு க ஸ்டாலினை ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டோம் என முதலமைச்சர் விஜய் பேசியது நியாயமற்றது என்றும் மதயானை போன்ற திமுகவையே அடக்கி ஆண்ட பாரம்பரியம் கொண்ட அதிமுகவை விஜய் தூது போன சக்தியான கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியவர் தவறு இருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்காமல் தவிர முதலமைச்சர் நாற்காலியில் இருப்பவர் இப்படி வசைப்பாடி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை காட்டுகிறது என்றும் இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சொன்னதோடு அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாக கூறப்படுவது முற்றிலும் திட்டமிட்ட ஒரு பொய் நாடகம் என்றும் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு வெளியேறியவர்கள் அனைவரும் விரைவில் மண்ணை கவிவிட்டு மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலே இணையும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Tags :


















