மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை இன்று ரத்து.

by Editor / 06-09-2024 06:36:40am
 மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை இன்று ரத்து.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,இன்று   (செப்டம்பர்.6) இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் ரயில் (வண்டி எண். 22623) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை ரத்து

Share via