ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். ஜலவார் மாவட்டம் பரலிய கிராமத்தை சேர்ந்த பிரஹலாத்தின் 5 வயது மகன் கலுலால் பகரியா. இச்சிறுவன் எதிர்பாராத விதமாக 32 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் இன்று அதிகாலை 4 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டான்.
Tags :