ஹாக்கி விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்திய கனிமொழி கருணாநிதி

by Editor / 04-12-2021 12:06:46pm
ஹாக்கி விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்திய  கனிமொழி கருணாநிதி

ஹாக்கி இந்தியா நடத்தும் 11வது தேசிய சீனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள் பிரிவில் பங்கு பெறுவதற்கு ஆக்கி யூனிட் ஆப்  தமிழ்நாடு சார்பாக தமிழக அணி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக அவர்களுக்கு சென்னை எழும்பூர் சர்வதேச ஹாக்கி விளையாட்டு அரங்கில்  பயிற்சி நடைப்பெற்று வருகிறது. பயிற்சி பெற்றுவரும் நபர்களை தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தமிழக வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களை வாழ்த்தி அவர்கள் பயிற்சி மேற்கொள்வதை நேரில் பார்வையிட்டார்.Dr.R. அனந்தகுமார், ஸ்போர்ட்ஸ் மெடிசன் டாக்டர் கண்ணன் புகழேந்தி, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர்  சேகர் J மனோகரன் பொருளாளர்  ராஜராஜன் ஒலிம்பியன் திருமால்வளவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக  கனிமொழி கருணாநிதி அறிவுரை  மற்றும் ஆலோசனைகள்  வழங்கினார்கள். 
 

ஹாக்கி விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்திய  கனிமொழி கருணாநிதி
 

Tags :

Share via