வீடியோ கேம் விளையாடி சென்றவர்கள் மீது ரயில் மோதியதில் ஒரு மாணவர் பலி,ஒருவர் காயம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்திர கவுண்டன் பாளையம் இடுகாடு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாலத்தில் சேலத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டு இருக்கும் பொழுது ரயில் மோதி புத்திர கவுண்டம்பாளையம் அருகே உள்ள தேவேந்திர நாடு கிராமத்தை சேர்ந்த குமார் மகன் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவருடன் சென்ற மற்றொரு நபர் புத்திர கவுண்டன் பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரவிக்குமார் மகன் அரவிந்த் அடிப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேற்படி மாணவர்கள் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.இவர்கள் இருவரும்செல்லில் வீடியோ கேம் ஆடிக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏத்தாப்பூர் போலீசார்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : வீடியோ கேம் விளையாடி சென்றவர்கள் மீது ரயில் மோதியதில் ஒரு மாணவர் பலி,ஒருவர் காயம்.