ரூ.40 ஆயிரம் லஞ்சம் புகார் மயிலம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

by Editor / 17-11-2024 04:48:47pm
ரூ.40 ஆயிரம் லஞ்சம் புகார் மயிலம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் சோழிய சொற்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கலைஞர் திட்டம் மூலம் வீடு கட்ட உரிய அனுமதி பெற்று மண்ணுடித்துள்ளார்.மண்ணடித்த லாரியை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் மயிலம் காவல் ஆய்வாளராக பணிபுரியும் ஆய்வாளர் கமலஹாசன் மடக்கிபிடித்துள்ளார்.உடனடியாக விவசாயிடம் லாரியை விடுவிப்பதற்காக ரூபாய் 40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டிவனம் டிஎஸ்பி மற்றும் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது..மேலும் இது சம்பந்தமாக அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் பல்வேறு இடங்களில் காவல் ஆய்வாளர் கமலஹாசனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது இதை அடுத்து இன்று மயிலம் காவல் ஆய்வாளர் கமலஹாசனை விழுப்புரம் வடக்கு மண்டல டிஐஜி தி ஷா மிட்டால் அதிரடியாக விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார்.

 

Tags : ரூ.40 ஆயிரம் லஞ்சம் புகார் மயிலம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Share via