கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டார்.

by Editor / 17-11-2024 01:27:48pm
 கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டார்.

நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் கொடுக்க சென்றபோது அவர் தலைமறைவானார்.

பின்னர் அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது நீதிமன்றம்.

இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை பிடிக்க இரு தனிப்படை   அமைக்கப்பட்ட நிலையில் நேற்று அவரை ஹைதராபாத்தில் அதிரடியாகஎழும்பூர் தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.  தற்போது அவரை சென்னைக்கு அழைத்து வந்து விட்டநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி விசாரணைக்காக தற்போது அழைத்துவரப்பட்டுள்ளார்.

 

Tags :  கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டார்.

Share via

More stories