கல்லூரி மாணவர்கள் வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் செய்த பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஊசிகல்லு மேடு பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் ஊராட்சி நிர்வாக சுமார் 6 மாத காலமாக ஒழுங்காக குடிநீர் விநியோகம் செய்யாத காரணத்தாலும்மேலும் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறிஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளிக்கும் எந்த நடவடிக்கை இல்லை என்ற காரணத்தால்அக்ரஹாரம் பகுதியில் திருப்பத்தூர் வழியாக நாட்டாறம்பள்ளி செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த அரசு பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இருந்தனர் அதனைத் தொடர்ந்து அரசு பேருந்து சிறை பிடிப்பின் காரணமாக அனைத்து மாணவர்களும் இறங்கி கல்லூரிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.இதனை அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இருப்பினும் சமாதானம் ஆகாத பொதுமக்கள் வட்டாட்சியர் குமார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags :



















